Thursday, May 13, 2010

காய்கறி வடை

காய்கறி வடை
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:- 

உளுந்தம்பருப்பு - 100 கிராம் 
கடலை பருப்பு - 100 கிராம் 
காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது) 
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது 
இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது 
மிளகாய் - 2 
சீரகம் - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
எண்ணெய் - 1/2 லிட்டர் 
உப்பு - தேவையான அளவு
செய்முறை
செய்முறை:- 


1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். 


2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்) 


3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும். 


4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

பால் பாயசம்

பால் பாயசம்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:- 

அரிசி - 200 கிராம் 
பால் - 1 லிட்டர் 
சர்க்கரை - 250 கிராம் 
பாதாம், முந்திரி - 15 
ஏலக்காய் - 5 (பொடி செய்தது) 
திராட்சை - 15 
நெய் - 50 கிராம்
செய்முறை
செய்முறை:- 


1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 


2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 


3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 


4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 


5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். 


6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும்.

Thursday, May 6, 2010

ஜவ்வரிசி பாயசம்

தேவையான பொருட்கள்

சேமியா – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
முந்திரி – 15
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
திராட்சை – 15
நெய் – 50 கிராம்

செய்முறை

1. முதலில் ஜவ்வரிசியை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து பின்பு வடிகட்டி சேமியா சூடாக இருக்கும் போது பாதி அளவு சர்க்கரையை இதில் கலந்து வைக்கவும்.

3. பிறகு ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்த சேமியாவை கொட்டி கிளறி விட வேண்டும்.

4. பிறகு சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

2. தேவையானால் பால் சேர்த்து செய்யலாம்.

மசாலா பூரி

தேவையான பொருட்கள்

கோதுமை – ஒரு டம்ளர்
பட்டர் – இரண்டு மேசை கரண்டி
தயிர் – இரண்டு தேக்க்ரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மசாலாவிற்கு
கருப்பு எள் – ஒன்னறை தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒன்னறை தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கராண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணை – பூரி சுட தேவையான அளவு

செய்முறை

1.கொடுக்க பட்டுள்ள மசாலாவை லேசாக வருத்து கொள்ள வேண்டும்.

2.பிறகு மைதா,கோதுமையை கலந்து அதில் உப்பு,தயிர்,பட்டர் உருக்கி போட்டு,மிளகாய் தூளும் சேர்த்து வருத்து வைத்துள்ளதையும் போட்டு நல்ல பிசறி தேவைக்கு தண்ணிர் சேர்த்து நன்கு கெட்டியக பசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

3.பிறகு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.

மாம்பழ அல்வா

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 1(கனிந்தது)
ரவை –150 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
நெய் – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – சிறிது
ஏலக்காய்த்தூள் – சிறிது

செய்முறை

1.மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டி விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த விழுது குறைந்தது 300 கிராம் இருக்க வேண்டும்

2. வாணலியில் ரவையை இலேசாக வறுத்து அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும்

3.வாணலியில் மாம்பழ விழுதைப்போட்டு சிறு தீயில் இலேசாக வதக்கவும்

4. அதில் ரவை,சர்க்கரை போட்டு நன்றாகக் கிளறவும்.அத்துடன் நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்

5.முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவி நெய் தடவிய தட்டில் ஊற்றிச் சமமாகப் பரப்பி விடவும்

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கோப்பை
அரிசி மாவு – 6 கோப்பை
கடுகு – சிறிதளவு
எலுமிச்சைம்பழம் – 1
புளித்த தயிர் – 1 கோப்பை
பச்சைமிளகாய் – 3
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து விழுதில் சேர்க்கவும்.

4. பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த விழுதுடன் சேர்க்கவும்.

5. அதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

Monday, May 3, 2010

நெல்லிக்காய் சாதம்


தேவையான பொருட்கள்

சாதம் – 1 கோப்பை
பெரிய நெல்லிக்காய் – 6
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – 2 கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விடவும்.

2. வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.

4. அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது நேரம் (2 அல்லது 3 நிமிடம்) வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

5. அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும்.

6. தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி சுவையாக இருக்கும்.

2. நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாகத் (இஞ்சி துருவலில்) துருவிக் கொள்ளவும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.

3. தேவைப்பட்டால் பொட்டுக்கடலையுடன், முந்திரி மற்றும் நிலக்கடலையும் நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தாளிக்கும் போது வர மிளகாய்க்குப் பதில் பச்சை மிளகாயும் சேர்த்துச் செய்யலாம்